கடந்த சில நாட்களாவே ஒரு விதமானப் பதற்றம், ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகுதுன்னு உள் மனசு சொல்லிட்டே இருந்துச்சு, அது இன்னைக்கு நடந்துடுச்சு. நானும் ஒன் ஃபைன் நைட்டு ரூம்ல லைட்டு போட்டு யோசிச்சேங்க, 10 மணியிலேர்ந்து 12 மணி வரைக்கும் எதுக்கு எழுதனும்னு யோசிச்சேன், 12 மணியிலேர்ந்து 2 மணி வரைக்கும் எழுதுனா என்ன தப்புன்னு யோசிச்சேன், 2 மணிக்கு அப்புறம் எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா என்ன எழுதறதுன்னுதான் முடிவு பண்ணல அல்லது பண்ண தெரியல. அதனால்தான் ப்ளாகோட பேரு "என்ன எழுதுவது" னு வச்சுட்டேன் (அப்பாடி ப்ளாகோட பெயர்க்காரணத்தை சொல்லியாச்சு!). அப்புறம் இந்த ஞானம், நமக்கு அது பேருல மட்டும்தாங்க இருக்கு. எனக்கு இந்த நாமத்தை சூட்டிய என்னோட அத்தைக்கிட்ட பெயர்க்காரணத்தைக் கேட்டேன், இந்த குழந்தை எதிர்காலத்தில் ஒரு பூட்ட கேசாகத்தான் (உபயம்: வசூல்ராஜா) வரும் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிவதால் (என்ன ஒரு கணிப்பு பாருங்க? நம்ம முக ராசி அப்படி!) பெயரில் மட்டுமாவது ஞானம் இருக்கட்டும்னு வச்சாங்களாம்.
ஆனா அத எங்க தாத்தா சொர்கத்துல இருந்து பார்த்துட்டு ரொம்ப ஃபீல் பண்ணி பாட்டியோட கனவுல வந்து ஒரே அழுகாட்சியாம். பேரன இப்படி எல்லாரும் அவமானப் படுத்திட்டாங்களேன்னு ஃபீலிங்க்ஸ் ஆயிருப்பாங்கன்னு அவசரப்பட்டு நீங்க தப்பா நினைச்சுடாதீங்க. ஏன்னா அவங்க ஃ பீல் பண்ணது இப்படி ஒரு புள்ளைக்கு நம்ம பேரு வர மாதிரி வைச்சுப்புட்டாங்களே அப்படின்னு. அதனால எங்க பாட்டி உடனே புள்ள புரட்சிக்கலைஞர் கலர்ல செக்கச்செவேல்னு இருந்ததால இன்று முதல் அனைவராலும் விஜய் என்று (ம்) அன்போடு அழைக்கப்படுவார்னு அறிவிச்சு தாத்தாவோட ஆன்மாவ சொர்க்கம் வரைக்கும் சாந்திப் படுத்தினாங்க. ஆனா நான்தான் கடந்த இரண்டு ஆண்டுகளா இந்த பெயரைச் சுமக்க சிரமப்படுகிறேன் (சமீபத்திய காரணம் சுறா- தி லீடர்). சரி விடுங்க என்னோட சோகம் என்னோட போகட்டும்.
எங்க ஆரம்பிச்சேன்? ஆங் ஞாபகம் வந்துடுச்சு, ஞானத்துல ஆரம்பிச்சது. இதெல்லாம் எதுக்கு நான் சொல்றன்னா, நமக்கு பெரிசா இலக்கிய ஞானமோ இல்ல அறிவியல் ஞானமோ இல்லைங்க. சுஜாதான்றவங்க இந்த பாபா படத்துல ரஜினியோட அம்மாவா வருவாங்களே அவங்களா? அப்படின்ற அளவுக்குதான் நமக்கு இலக்கியம்லாம். எனக்கு தெரிஞ்ச, தெரியப்போகிற விஷயங்கள, அது சினிமாவோ, புத்தகமோ, கிரிக்கெட்டோ, இசையோ அரசியலோ இல்லை எவர்க்ரீன் காதலோ, ஏதோ ஒன்றைப் பற்றி எழுதலாம் என்று எண்ணம். "பெரிய பெரிய யானைங்க வாழுற இந்த காட்டுலதான் சின்ன சின்ன எறும்புகளும் வாழுது" (நன்றி: ஜெயமோகன்). அத மாதிரி நாமளும் ஒரு ஓரமா நிப்போம்னு ஒரு நப்பாசை.
எந்த பெரிய விஷயத்துக்கும் ஆரம்பம்னு ஒன்னு சின்னதா இருக்கும்ல? சரி.. சரி.. நான் எழுதறத பெரிய விஷயம்னு சொல்ல வரல. ஆனா இது ஒரு சின்ன ஆரம்பமா இருக்கட்டும். மற்றபடி வலைப்பூ தொடங்க எனக்கு முன்னோடியாக இருந்த என் தம்பி செந்திலுக்கு நன்றிகள். அவரு ஒரு ப்ளாக் ஆங்கிலத்துல எழுதுறாரு. சார் பெரிய கம்ப்யூட்டர் என்ஜினியர் அதனால அவரு கொஞ்சம் இந்திய அமெரிக்க உறவு, அணு சக்தி ஒப்பந்தம் அப்படின்னு பெரிய பெரிய மேட்டரெல்லாம் எழுதுவாரு. ஆனால் நான் விரைவில் ஒரு மொக்கை மேட்டரோடு உங்களை சந்திக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
a good start.... all the best to become a good writer....no no it doesnt mean the content is not good... hiyya i escaped...
ReplyDeleteparen.. indha paiyanukulla ennamo erundhirku :-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஞானா, ஆரம்பமே ரொம்ப ரொம்ப அதிரடியா இருக்கு!!. எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே அந்த தன்னடக்கம் தான்!! அது இன்னக்கு கொஞ்சம் ரெம்பவே ஓவரா இருக்கு..அப்புறம் சைடு கேப்-ல, சுஜாதா, ஜெயமோகன எல்லாம் எங்களுக்கும் தெரியும்ல-ற மாதிரி ஒரு பிட் போட்டு நவீனத்துவம், பின் நவீனத்துவம் பத்தி எல்லாம் அப்புறம் நாங்களும் பேசுவோம்ல-னு சொல்லுறதுக்கு ஒரு லீடு குடுத்து இருக்கீங்க பாருங்க, அது ரெம்ப அருமை!! ரெம்ப நல்லா இருக்கு பாஸ்...அப்புறம் வழக்கம் போல உங்க பிரண்டா இருக்குறதால எனக்கு வர்ற கர்வமும். பெருமிதமும் இன்னக்கு எனக்கு ரொம்ப அதிகமாவே ஆயிடுச்சு பாஸ்!!!
ReplyDeleteசரி ஞானா, உங்க எழுத்துல ஒரு மெல்லிய நல்ல நகைசுவை வழிந்தோடுது பாத்திங்களா, அது தான் என்னைய மாதிரி ஒரு தரமான விமர்சகனை கட்டி போடுது.. அதை அப்படியே கன்நியூ பண்ணுங்க.. அப்புறமா நமக்கு ரெம்ப பிடிச்ச டாபிக்கான தமிழக அரசியல், சினிமா-னு வாங்க... ஒரு கை பாக்கலாம்...
Arumaiya arumai!!
ReplyDeleteside gapula nee US poi color aayita apdingradhunala vetty scene poduradhu manikka mudiyadha kutram :P
senthil US relations pathi yen eludhuraanna avan US la relation onnu vachukalamnu than eludhuran mathapadi avanuku oru mannum theriyadhu!!
enna than irundhalum nee 'Ilaya thalapathy' pathi ippadi sollirukka koodadhu :P
Kadasiya ennaoda rendu annanga indha maaathiri vela polaapu illama (unmayaga?)maathi maathi blog eludhuradhu enakku romba perumaya irukkupa, romba perumaya irukku :'(
நல்லா இருக்கு ஞானா , கலக்குங்க !!!
ReplyDeleteHay Gnana. Enna koduma unakulla ivalo pariya kalajan utkanthutu irrukanu ippa thane thariuthu.. Keep it up gnana. Pirkalathula nee oru book eluthurathuku valthukal
ReplyDeleteComments padichitu Gnana ::Aama yean idhellam en enkita solranga..
ReplyDeleteSenthil::Inimel ellam apdidan.
(Upayam-Tamil padam).
Thalaiva pinreeenga ponga..pale pale...keep it up!!
Very well written Gnana.. When are you planning to write the next?
ReplyDeleteNice Blog to start ... Continue your good work :)
ReplyDeleteகல்யாண ஆசை வந்தத, அண்னன வச்சு மறைமுகமா சொன்னது அருமை. இடை இடையே ஒரு வாசகனை போன்று குறிப்புகளை அடைப்புக்குள் போட்டு, நல்ல புள்ள மாதிரியே காமிச்சுகுகறது ரொம்ப அருமை. (Its usually followed by all the blog writers). I'm very keenly waiting to read yet another wonderful blog. Congrats...:-)
ReplyDeleteDaai Yaaruda andha kadhalai.....!!!!
ReplyDelete