Saturday, May 29, 2010

வந்து விட்டேன் கிறுக்கல்களோடு..

நான் ஸ்கூல் படிக்கற வரைக்கும் கவிதைனா ஏதோ யாப்பு, அணி, பா இதெல்லாம் பயன்படுத்தி கோணார் உரை எழுதுபவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் எழுதும் ஒரு முறை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நமக்கு அப்பவெல்லாம் செய்யுள மனப்பாடம் பண்ணி அதை அப்படியே பரீட்சையில் எழுதறதே (அதுவும் அடி பிறழாமல்னு கொடுப்பாங்க பாருங்க) பிரசவ வேதனை (கொஞ்சம் ஒவரோ?பின்ன எக்ஸாம் ஹாலுக்கு முன்னாடி நின்னு படிச்சுட்டு உள்ள போய் அப்படியே அதை இறக்கி வைக்கணும்ல??). அதுவும் ஒரு தடவை செய்யுள சரியா எழுதிட்டு அதுக்குக் கீழ "ஆசிரிய விருத்தம்னு" தப்பா எழுதுனதுக்கு நீ இதுக்கு பதிலா "ஆசிரிய வருத்தம்னு" எழுதியிருந்தன்னா சரியா இருந்திருக்கும்டானு எங்க தமிழ் அய்யா பொண்ணுங்க முன்னாடி பாராட்டினது(!!) நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் காலேஜ் வந்த பிறகு கொஞ்ச நாளைக்கு "அதோ பாரு லைட்டு அண்ணாமலைதான் வெயிட்டு" அப்படின்னு சத்தம் போடுறதுதான் எங்களைப் பொறுத்த வரைக்கும் கவிதை. அதுக்கப்புறம் மில்கி வேயிலையும் நிரூலாஸ்லையும் நின்னுகிட்டு ஒரு டீய ஒன்றரை மணி நேரம் குடிச்சுட்டு அன்னைய பாடங்களைப் பத்தி டிஸ்கஸ் பண்ணியதில் (பாடத்த பத்தி டிஸ்கஸ் பண்ணவாடா நம்ம அங்க நின்னோம்னு இந்த இடத்தில் யாரும் கேட்கக்கூடாது) இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. அதுக்காக கடைசி வரைக்கும் அப்படியே இருந்தா எப்படி?? இதுக்கு நடுவுல புதுக்கவிதைன்னு ஒன்னு இருக்கு அதுக்கு மேற்படி சொன்ன சமாச்சாரங்கள் எதுவும் தேவையில்லைனு ஆனந்த விகடன்ல சுஜாதா சொல்லிட்டாரு. ஆனா நல்ல கவிதைங்கறது எப்படி இருக்கனும்னு வேற அவரோட கருத்த சொன்னாரு. அது என்னன்னா? ஒரு கவிதையை படிக்கும் போது அந்த காட்சி கண் முன்னாடி விரிந்து சில பல கேள்விகளை அல்லது உணர்வுகளை எழுப்பனுமாம் மொத்தத்தில் தொக்கி நிற்கனும்.(அல்லது அப்படிதான் நான் புரிந்து கொண்டேன்). அவர் கொடுத்த ஒரு உதாரணம்,
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து
மூடப்பட்டது..

இன்னொன்று
வரிகள் சரியாக ஞாபகம் இல்லை,

"
மழை பெய்ய ஆரம்பித்தது
புத்தகத்தை
மூடி விட்டு
அதை
ரசிக்க ஆரம்பித்தேன்"

என்று
வருமென நினைக்கிறேன். ஆனால் இந்த டைப்ல இப்ப நா முத்துக்குமார் நிறைய அப்புறம் எழுதுறாரு. அதைப்பற்றி தனி ஒரு பதிவே போடலாம். (சுஜாதா, முத்துக்குமார் சொன்னதுல்லாம் சரி நீ இப்ப என்ன சொல்ல வர??). நான் இதையெல்லாம் படிச்சு மோட்டிவேட் ஆகி கிறுக்கி இருப்பேன்னு நினைச்சுடாதீங்க. எல்லாரையும் மாதிரி மத்தவங்கள ( போ) இம்ப்ரெஸ் பண்ணதான் இதெல்லாம் ஆரம்பிச்சது அப்புறம் அது பிடிச்சு போச்சு. ஆனா என்ன இப்ப வரைக்கும் எதையும் ஒழுங்கா கிறுக்கினதா தெரியல.

அதனால மேற்படி நான் சொன்ன கவிதை இலக்கணங்களை எல்லாம் மறந்திட்டு அடுத்த வரிக்கு போக வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்ய மனம் வராதவர்கள் தயவு செய்து படிச்சுட்டு என்னைத் திட்டாதீர்கள். அதோட இதைப் படிச்சுட்டு இதெல்லாம் வைரமுத்து சொல்லிட்டாரு கண்ணதாசன் சொல்லிட்டாரு அப்படின்னு ஃபீல் பண்றவங்களை நான் மதிக்கிறேன். ஆனா என்னங்க பண்றது அதுக்காக நம்ம காதலுக்கும் சோகத்துக்கும் சந்தோஷத்துக்கும் அவங்கள எழுத சொல்ல முடியாது.. அவர்கள் தொடாத விஷயங்கள் என்று ஒன்று இருக்கிறதா என்றும் தெரியவில்லை.. ஆனால் அதுக்கு முன்னாடி வள்ளுவரும் கம்பரும் இன்ன பிற பெரிசுங்களும் நமக்கு எதையும் விட்டு வைக்காம எழுதிட்டு போய்டுச்சுங்க.. நம்ம மொழியோட வரலாறு அப்படி.. எத்தனை பேர் சொன்னாலும் காதலும் சோகமும் எல்லோருக்கும் ஒன்றுதான் அதை வெளிப்படுத்தும் தமிழும் ஒன்றுதான். எல்லோரும் காதலையும் சோகங்களையும் கடக்கும் போது அது அவர்களுக்கு புதிதுதான். அதனால சொல்லும் முறையைதான் பார்க்க வேண்டும்.. சொல்ல புதிதாக எதுவும் இல்லை, இங்கு மனிதர்களாகிய நாம் அனைவருமே காப்பி ரைட்டர்கள்தான், இயற்கைதான் உண்மையான கிரியேட்டர் என்பதும் அது நமக்கு அமைத்து கொடுக்கும் மைதானத்தில் அது வகுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதும் என் தாழ்மையான கருத்து. நாம் எப்போதெல்லாம் விதி மீறுகிறோமோ அப்போதெல்லாம் அது தன் இருத்தலை நமக்கு காண்பித்து விடுகிறது (வந்துட்டாருப்பா கொலம்பஸ்).
மீண்டும் நினைவூட்டுகிறேன் இது கவிதை இல்லை கிறுக்கல் (சாரி பார்த்திபன்).



முரண்பாடுகள்


உலக மக்களின் பசிப்பிணி போக்க
சாமிக்கு
நூற்றெட்டு குடம்
பாலபிஷேகம்.


குப்பைத் தொட்டியில் உணவுப் பொட்டலம்..
பொட்டலத்தாளில் செய்தி

"ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் பட்டினியால் சாவு"

இது இந்த போட்டோவைப் பார்த்த பாதிப்பில் எழுதியது.. இந்த புகைப்படமும் கிறுக்கலும் சொல்லும் கருத்தை படிப்பவர்களின் முடிவுக்கே விடுகிறேன்.

"ஆயுதம் வைத்திருந்ததாக ஒருவர் பொடாவில் கைது"
எங்கள் ஊர் சாமியும் அரிவாள் வைத்திருக்கிறார்
யார் கைது செய்வது??

"சாதிகள் இல்லையடி பாப்பா,
குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
என்று காலையில் பாரதியைக் கற்பித்த தமிழ் வாத்தியார்
மாலையில்
விண்ணப்பம் நிரப்ப கேட்கிறார்
"
நீ எந்த சாதி"??

"நாட்டின் பாதுகாப்பு குறித்து மக்கள்
அஞ்ச தேவையில்லை"-பிரதமரின் சுதந்திர தின உரை
குண்டு துளைக்காத மேடையிலிருந்து..

சுனாமி


கடலரக்கியே! ஆம், நேற்று வரை
கடல்
அன்னையே என்று அழைத்த அதே நாங்கள்தான்,
அன்னைக்கு அளிக்க மட்டுமே தெரியும் அழிக்க அல்ல.
அன்னையாக
இருந்த நீ ஏன் ஆழிப்பேரலை எனும்
அரக்கியாகிப்
போனாய்?
உனக்கு
ஒரு கேள்வி,
உலகில் சமத்துவம் தவழும் ஒரே இடம் நீ அறிவாயா?
கடவுளரின்
கருவறையா? அவையெல்லாம் தீவிரவாதத்தின்
கருவறைகளாகிப்
பல காலம் ஆகிறது, காசு கொடுத்தால்
கால்
மணி முன்னரே வந்து கடவுளே காட்சி தருவார் தெரியுமா?
அனைவருக்கும்
பொதுவான இடம் என்று
இடுகாட்டைக்
கூட காட்ட முடியாத இழி காலத்தில்,
சவமான
பின்னும் சாதியை விடாத எங்களுக்கு,
நீ
, நீ மட்டும் தான் அந்த அதிசயத்தை தினந்தோறும்
நிகழ்த்திக்
காட்டினாய்!
எத்தனை
மனிதர்கள்?? எத்தனை உணர்வுகள்??
எத்தனை கனவுகள்? எத்தனை காதல்கள்?
ஒரே சமயத்தில் அத்துனையும் பார்த்த மவுன சாட்சியாக நீ.
வாழ்க்கையைக் கொண்டாடுபவனும் திண்டாடுபவனும் ஒரே
நேரத்தில் சரணடையும் சரணாலயம் நீதான்.
யாருக்கும்
நீ பாரபட்சம் காட்டி அறிந்ததில்லை நாங்கள்.
உன்
கரையில் அமரும் போதெல்லாம் அலையாக நீ மீண்டும்
மீண்டும் வந்து உன் சமத்துவப் பாங்கை எங்களுக்குப் பகன்று
எங்களை
பகடி செய்வதாகக் கூட சில சமயங்களில் நினைத்ததுண்டு..
தான் கொடுத்த பாலுக்கு கணக்கு பார்த்ததில்லை எந்த தாயும்,
ஆனால்
ஒரு கந்து வட்டிக்காரி போல் நீ போட்ட உப்பை
வட்டியோடு
திரும்பப் பெற்றிருக்கிறாய் கண்ணீராக!!
" உப்பிட்டவரை உள்ளளவும் நினை"
என்று
நன்றிக்கடனுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் நாங்கள்.
ஆனால்
இப்பொழுது சொல்கிறோம்,
இனி
, உப்பிட்டிருந்தாலும் உன்னை
"
எள்ளளவும்" நினைக்கப் போவதில்லை..
ஆனால்
, தாயே அடித்தாலும் அவள் மடி தேடி ஓடும்
குழந்தை
போல உன் மடி தேடி நாங்கள் வரலாம்.
அப்போது
உன்னிடம் எதிர்பார்ப்பது அன்னையின் அன்பை.
இனி ஒரு முறை தாய்மை இழந்து எங்களைத் தவிக்க விடாதே!


ஹைக்கூ (மாதிரி ஆனா அது இல்ல)

காற்று அறைவதால்
அழுகிறதோ மேகம்?
மழை..



காதல்..















"
என்னை செல்லமாக எப்படி அழைப்பாய்?" - இது நீ.
செல்லத்தை
செல்லமாக எப்படி அழைப்பது என்று யோசித்தவாறே
"
அமெரிக்கா என்று அழைக்கலாமென்று இருக்கிறேன்" - இது நான்.
"ஏன்?" என்றாய் இதை சற்றும் எதிர்பார்க்காதவளாய்,
என்
"மேலிமை தேசத்துக்கும் கீழிமை தேசத்துக்கும் போர் மூட்டி"
விடுவதால்
என்றேன்.

அமெரிக்காவின் ஆயுதம் விற்கும் சூட்சுமம் பலரும் அறிந்ததுதான். இரு தேசங்களுக்கு இடையில் போர் மூட்டி விட்டு இருவரிடமும் விற்று விடுவது. இங்கு நான் சொல்ல விழைந்திருப்பது, நீ அருகிலிருக்கையில் இமைக்காமல் பார்க்கிறேன், இல்லாத போது தூக்கமின்றி தவிக்கிறேன்!!
புஷ் தனது பூனைக்கு இந்தியா என பெயர் சூட்டலாம் நான் என் செல்லத்துக்கு அமெரிக்கா என்று வைக்கக்கூடாதா?? ((ஓகே ஓகே கூல்டவுன்)
...............
வானிலை அறிக்கையில் காற்றின் ஈரப்பதம்
பற்றி
சொல்லும்போதெல்லாம் ஏனோ மனது
முன்னிரவில்
அலைபேசியில் நாம் பரிமாறிக்
கொண்ட
முத்தங்களின் எண்ணிக்கையை
நினைத்துப்
பார்க்கிறது.. அங்கு எப்படி?

...............

செய்தித் தாளில் தலைப்புச் செய்தி
"சந்திர
மண்டலத்துக்கு அனுப்பிய விண்கலம்
வீட்டு
மாடியில் இறங்கியதென்று"
உன்னை
யார் மொட்டை மாடியில் நிற்க சொன்னது??
...................
இதையே இப்போ எழுதியிருந்தா ஒரு வேளை இப்படி எழுதிருப்பேன்னு நினைக்கிறேன்.

சந்திராயன் வெற்றி பெற்றதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டாம்.
அதற்கு
மேலும் இருவரை அழைக்காமல் விட்டு விட்டார்கள்.
நீ
வெளியே வந்தால் சந்திரன் எதுவென்று விண்கலம்
தடுமாறி
விடும் என்று வீட்டினுள்ளேயே இருந்த உனக்கும்
அதை
முன்கூட்டியே ஊகித்து உன்னை இருக்கச் செய்த எனக்கும்.. அது விஞ்ஞானம், இது "மெய்"ஞானம்..

...............

"எனக்காக உயிரையும் தருவாயா?"
எனும்
ஒரே கேள்வியில் என்னை நோகடித்து விட்டாய்..
உன்னிடம்
உள்ளதை நான் எப்படித் தர முடியும்??
இதைக்
கூட அறியவில்லையா நீ?

................
விமானத்தில் ஐம்பது கிலோ சுமைக்குதான் அனுமதியாம்..
ஐயோ
பாவம் அது எப்படி என்னுள் உள்ள உன் காதலின்
கணக்கிலடங்கா
கனத்தைத் தாங்கிப் பறக்கும்?
எனக்கு
பயமில்லை.. அண்ட வெளி முழுதும் நிரம்பியுள்ள
(நம்
) காதல் அதைத் தாங்கிப் பிடிக்கும்..


அப்புறம் என்ன அவ்ளோதான்.. இன்னும் சில மேட்டர்கள்.... என்னோட அந்த டைரி நானே எடுத்து சில வருஷங்கள் ஆச்சு, அதனால மறந்து போச்சு.. இருந்தாலும் மொக்கையை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். அப்புறம் தம்பிகாள், அண்ணன் கீழ இருக்கற கவிதைகள நிஜத்துல செய்யுற அளவுக்கு வொர்த் கிடையாது. அதால செல்லம் யாரு அப்படின்னு கேக்கப்படாது (கவிதைக்கு பொய் அழகு :-)). மேற்படி இருக்கிற போட்டோ ஒரு சப்போர்ட்டுக்காக நான் போட்டது அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி...

7 comments:

  1. மிக நன்று ...உங்கள் அடுத்த வார புது கருத்துகளுக்கு காத்துகொண்டிருக்கிறோம் ...

    ReplyDelete
  2. ' என்னுள் உள்ள உன் காதலின்
    கணக்கிலடங்கா கனத்தைத் '
    merkanda variya padikkum podhu enakku anni weight party ah iruppangalonnu thonudhu ;)
    appadi thana ??
    Haiyo Haiyo :D

    ReplyDelete
  3. Baraney!!! dont worry anni romba slim (Mami)!!!!

    ReplyDelete
  4. Dei dubukku, doubt praba aenda kudumbathula kuzhappatha undu panra?? yaarra adhu maami enakku theriyama?? roll no pakkathula varavanga ellam aalunnu solliduviya?? Eglandlayey irundhuda mudiyaadhu India varanum mind it.... Airport layey aal vachu thookiruven :-)

    ReplyDelete
  5. Vijay.. Really nice one. kavitha kavitha (Like Guna film). Especially

    குப்பைத் தொட்டியில் உணவுப் பொட்டலம்..
    பொட்டலத்தாளில் செய்தி
    "ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் பட்டினியால் சாவு".

    Nee en un kavithaigala , magazines ku anupa koodaathu ? parisu vaangaru alavaku veriyaa iruku !!

    ReplyDelete
  6. Thanks for ur comments da Senthil!! Hmm.. magazines?? :-)...

    ReplyDelete
  7. Hi Somz... Adutha vaaram?? paapom edhavadhu sikkudhaanu.. aana naan aerkanavey sonna maadhiri pudhu karuthunu edhuvum illa.. but mudinja varaikkum try panren :-).. Thanks much for ur comments!!

    ReplyDelete