அயல் நாடு வந்து வாங்கிய முதல் சம்பளத்தில்
வீட்டிற்கு அனுப்பியது போக மீதியில் வாங்கிய
சோனி டிஜிட்டல் கேமராவில் முறைத்தும்,
சிரித்தும் படம் பிடித்து அனுப்பிய வார இறுதியின்
சில வழக்கமான அலைபேசி அழைப்புகள்..
"நீ அனுப்புன பணத்துல, நம்ம வாங்கின அந்த ரெண்டு கடனையும்
-இது அண்ணன்.
"என்ன கேமரா? "சோனி"யா? கெனானா? லேட்டஸ்ட் மாடல்தான?"
எத்தன ஆப்டிகல்ம் ஜூம்? - இது தம்பி.
"கருப்பு கலர்ல சட்டை போட்டுருந்தா அந்த ஸ்னோ போட்டோ
இன்னும் நல்லா இருந்துருக்கும்" - இது காதலி
"மச்சான் என்ஜாய் பண்ற போல? அந்த ரயில்வே ஸ்டேஷன்
போட்டோல தூரத்துல ஒரு வெள்ளைக்கார ஃபிகர் சூப்பரா
இருக்குடா. நீ இல்லாம கொஞ்சம் போரடிக்குது?
வரும்போது மறக்காம சரக்கு வாங்கிட்டு வாடா."
- இது கல்லூரி நண்பன்.
"ஊர் நல்லாதான் இருக்கு. உன் விசா முடிஞ்சு நீ இங்க
வந்த பிறகு யாருடா அங்க போகப்போறாங்க? தெரியுமா?"
- இது அலுவலக நண்பன்.
"என்ன? வேலையெல்லாம் நல்லா போகுதா? தங்கற
இடம்லாம் எப்படி? வசதியா இருக்கா? இரு
அம்மாக்கிட்ட கொடுக்கறேன்" - இது அப்பா.
"என்னடா தம்பி போட்டோல இப்படி இளைச்சு போய்ட்ட??
உடம்புக்கு எதுவும் முடியலையா? ஒழுங்கா
சாப்புடுறியா இல்லையா? முதல்ல உடம்ப பாத்துக்கப்பா.
பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்கு..
எப்போ வருவ?" - இது அம்மா..
இது அனுபவத்தின் மூலம் மட்டுமே உணரக்கூடிய ஒரு நுண்ணுணர்வு ஆராயக்கூடாது..
ஐம்பது பவுன் தங்கம், ஐந்து கிலோ வெள்ளி,
ஐந்து லட்சம் ரொக்கம், இன்ன பிறவற்றோடு
இலவச இணைப்பாக என் அக்கா..
"பெரியோர்களால்" நிச்சயிக்கப்பட்டு
இன்று இனிதே நடந்தது திருமணம் ..
மணிக்கு நூறு குறுஞ்செய்திகள் ,
நாளொன்றுக்கு நாலு மின்னஞ்சல்கள்,
இரண்டு அலைபேசி அழைப்புகள்,
இவற்றில் இல்லை,
இவை யாரிடமிருந்து வந்தாலும்
அது உன்னுடையதாக இருக்குமோ என்ற
குறுகுறுப்பிலும் அதைத் தொடர்ந்த
ஏமாற்றத்தில் வரும் "புண்"சிரிப்பிலும்
வாழ்கிறது நம் காதல்!!
"எல்லோருக்கும் எல்லாமும்
சொந்தம்" என்று நான் பொதுவுடமை பேசும் போதெல்லாம்
உன் முகம் வாடி விடுகிறது. இப்போது சொல்கிறேன்,
என் காதலும் நான் கிறுக்கிய கவிதைகள்
அனைத்தும் உனக்கே சொந்தம்..
முன்னது கம்யூனிசம், பின்னது காதலிசம்.
"ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது
ஆனால் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றலாம்"
-ஐன்ஸ்டீன் சொன்னது.
இது மின்னாற்றலுக்கும் வேதியாற்றலுக்கும் பொருந்தலாம்,
என் காதலாற்றல்? அதை உன்னால் மட்டுமே ஆக்க முடியும்
யாராலும் அழிக்க முடியாது,
மாற்றிக்கொள்ள என்னால் கண்டிப்பாக முடியாது.
பாவம்!! நான் உன்னை சந்தித்தது போல
ஐன்ஸ்டீன் யாரையும் சந்திக்கவில்லை போல.
சந்தித்திருக்கவும் வாய்ப்பு இல்லை..
என்னவோ தெரியல இத மாதிரி எதையாவது கிறுக்கலாம் அப்படின்னு உட்காரும்போது இந்த பச்சை கலர் மேட்டரும் சேர்ந்து வருது.. யூத்னா அப்படிதானோ?