Thursday, May 20, 2010

மீண்டும் வருவேன்

பின்னூட்டம் போட்டும் கூகுள்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் பாராட்டி (என்னைய வச்சு காமெடி பண்ணியதற்கும்னு சொல்லனுமோ??) என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன். அப்புறம் என்ன, ஏதோ நாம் அறிமுகத்தையே ஒரு பதிவா கொடுத்தாச்சு அடுத்த பதிவாக "என்ன எழுதுவது" அப்படின்னு தீவிரமா யோசிக்காம லைட்டா யோசிச்சப்ப ஒரு யோசனை வந்து எழுதவும் ஆரம்பிச்சாச்சு, அப்புறம் அதுக்கு சில எதிர்ப்புகள் வந்ததால அந்த எண்ணத்தை கொஞ்சம் தற்காலிகமாக ஒத்தி வைத்து அத டிராப்ட்ல போட்டுட்டேன். ஆனா அதுவும் ஒரு வகையில நல்லதா போச்சு ஏன்னா அத அதுக்கப்புறமா ஒரு தடவைக்கு பல தடவ படிச்சு பார்த்தேன் ஏதோ ஒன்னு குறையுது. கண்டிப்பா அது விரைவில் வரும்.. சரி நம்மளும் ஏரியாவுல ரௌடின்னு ஃபார்ம் ஆயிட்டோமே, இந்த தொழில்ல மூலதனமே மக்களுக்கு நம்ம மேல இருக்கற பயம்தானே.. அது போயிடுச்சுன்னா நம்ம மேல ஒரு மரியாதை (இப்ப மட்டும் இருக்குதாக்கும்) இருக்காதே. அதுக்கு என்ன பண்ணனும் அப்பப்ப மக்களை அட்டாக் பண்ணனும், அர்னால்ட் பட ரவுடி அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ அர்ஜுன் பட ரவுடி அளவுக்கோ இல்ல அட்லீஸ்ட் சுறாவுல ஒரு ராக்கெட் யூஸ் பண்ணி இளைய தளபதி இந்திய நேவியோட புகழ உலகளவுக்கு எடுத்திட்டு போயிருப்பாரே இப்படி அந்த அளவுக்காவது அட்டாக் இருக்கனும்னு ஒரு ஆசை... ஒரு விருப்பம். என்னது இளைய தளபதி எப்போ வந்தாரா? நாசமா போச்சு.. உங்களால கண்டு பிடிச்சுருக்க முடியாது ஏன்னா வேஷமும் உலகத்தரம்.. இனிமே இந்த மாதிரி வேஷம் போடுறப்ப "இப்போ ராக்கெட் விட்டவர் உங்கள் விஜய்" அப்படின்னு போட சொல்லனும்.. (சுறா ஹாங் ஓவர்லேந்து நீ எப்போடா வெளிய வருவ?? மேட்டருக்கு வாடா..)

"என்ன எழுதுவதுன்னு" பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்த போது வந்த ஐடியா தான் இந்த பதிவு.. இதைப் படிக்கப் போற என் தம்பி, கசின் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோளோடு இதைத் தொடங்குகிறேன்.. அது என்னவென்றால் இனி வரப் போகும் ஒவ்வொரு வரிகளும் என்னுடைய சொந்த வரிகள் தான் என்றாலும் எந்த காரணம் கொண்டும் இது வசந்தாவிற்கு தெரியக்கூடாது.. அப்புறம் நான் அமெரிக்காவிலிருந்து ஆலம்பாடிக்கு திரும்ப செல்வது கஷ்டம். அதால கொஞ்சம் கருணை காட்டுங்கள்.. காட்டினீங்கன்னா அண்ணன் வரும்போது ஆப்பிள் ஐபாட் வாங்கிட்டு வருவேன்.. இந்த இடத்தில் வசந்தாவிற்கு ஒரு சின்ன அறிமுகம்.. என்னுடைய அம்மா.. மாமியாராகப் போகும் வயது.. (வெயிட் வெயிட் எங்க அண்ணனுக்கு கல்யாண வயசு ஆகுதுன்னு சொல்ல வந்தேன்.. இதற்கு பின்னால் என் ரூட்ட கிளியர் செய்யும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை என்பதையும்.. அவ்வாறு யாராவது தவறாக நினைத்தால் அவர்களுக்கு பால்ய விவாகம் தவறு என்று அம்பேத்கார் அறிவித்து உள்ள சட்டத்தை நினைவுப்படுத்தவும் கடமைப்பட்டுள்ளேன்.).. இருந்தாலும் மாமியாரோடு இன்றும் சிற்சில சண்டைகள் போட்டு, உங்கள் அபிமானத் திரையரங்குகளில் வெற்றி (வெட்டி??) நடைபோடுகிறது என வரும் விளம்பரப் படங்களுக்கு இடையில் கொஞ்சம் சீரியல் பார்த்து, சமைத்து, துணி துவைத்து, என் அப்பாவை எப்போதும் குறை சொல்லி எங்களைப் பற்றி எப்போதும் நிறைகளை மட்டும் சொல்லி வந்த, நம்மால் இல்லத்தரசிகள் என்று அடைமொழி கொடுக்கப்பட்டு, தாங்கள் அன்பென்னும் பெயரால் அடிமைகளானதுத் தெரியாமல் இருக்கும் சில கோடி பெண்களில் ஒருவர் (இப்படியெல்லாம் எழுதி மகளிரணிட்ட ஸ்கோர் பண்ணலாம்னு பாக்குறியா?? அதெல்லாம் நடக்காது தண்ணிய குடி தண்ணிய குடி). என்னதான் மாமியாரையும் கணவரையும் குறை சொன்னாலும் பிள்ளைகளை குறை சொல்லாத டிபிகல் அம்மாவிலிருந்து கொஞ்சம் வேறுபட்டவர். என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா? ஒரு நாள் நானும் எங்க அண்ணனும் திவ்யாவா மகாலட்சுமியா யாரு நல்லா ப்ரோக்ராம் பண்றாங்கன்னு(!!!) விவாதம் ஆரம்பித்து வாக்கு வாதம் வரைச் சென்றபோது (நல்ல அண்ணன் தம்பிங்க..) திடீர்னா சீரியல நிறுத்துவானுங்க.. பேசினத எல்லாம் கேட்டுபுட்டாங்க.. அப்புறம் என்ன உலகிலேயே ரொம்ப நல்ல ஆண்கள், அதாவது லவ் பண்ணாத, பேரண்ட்சை ரொம்ப மதிக்கிற, சீரியல் பார்க்கும் போது சேனல மாத்தாத, அப்புறம் சாம்பார் கெட்டுப்போகும்போது அது எத்தன தடவதான் கெட்டு போகும் அதான் நீ வச்சப்பவே ஒரு தடவ கெட்டு போச்சேன்னு என்னை மாதிரி கமெண்ட் பண்ணாத, முக்கியமா இந்த பாட்டி ஏம்மா சொல்றத கேக்க மாட்டேங்குது (பின்ன 2 ஸ்பீக்கரும் அவுட்டு ஆனா எப்படி கேக்கும்)அப்படின்னு ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டியாவது சொல்றவங்கதான்..

இது பத்தாதுன்னு ஒரு நாள்,

"ரசம் எப்படிடா இருக்கு??"
"சூப்பர்மா நீ வைச்சதாச்சே.."
"இல்ல விஜய் ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்டா.."
நான் என்ன சொல்லிருக்கனும்??
"அதுல்லாம் ஒன்னும் இல்லம்மா உனக்கு ரீசன்ட்டா சளி பிடிச்சுதுள்ள அதான் டேஸ்டு தெரியல.. முதல்ல டாக்டர போய் பார்க்கணும்"
இப்படி சொல்லிருக்கனும், நம்ம வாயில வாஸ்த்து அன்னைக்குன்னு பாத்து சரியில்ல போல அதால
"அது ஒன்னும் இல்லம்மா டேஸ்ட்டுதான் மிஸ்ஸிங்.." அப்படின்னு சொல்லிபுட்டேன்.. அதுல இருந்து சாப்பாடு கிடைக்கறதே கஷ்டமா இருக்கு..


மொத்தத்தில் தங்களது அண்ணன் தம்பிகள்தான் (என்னுடைய மாம்சுகள்) உலகில் நல்ல ஆண்கள் எனும் எண்ணம் இன்னும் ஸ்ட்ராங் ஆயிடுச்சு.. அதனால தம்பிகளா இந்த பதிவையும் பத்தி சொன்னீங்கன்னா நான் அவ்ளோதான்.. க்ரைம் ரேட் ஏற்கனவே ஜாஸ்தியா இருக்கு..

சரி அப்படி என்னாத்த எழுத போறன்னு கேக்கறீங்களா? கவிதை. ஓகே.. அதுக்கு??
ஒரு சில கவிதைகள் நம்ம ரொமான்டிக்கான மூட்ல இருந்தப்ப எழுதிருக்கலாம் அதெல்லாம் படிச்சுட்டு நம்மள பாத்து "அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா" அப்படிங்கறத கூட "அம்மா இங்கே வா வா ஆப்பம் சுட்டு தா தான்னு பாடுன பையன் இப்ப யாரையோ பத்தி உயிரே அப்படி இப்படி எல்லாம் எழுதுறானேன்னு பீலிங்க்ஸ் ஆயிட்டாங்கன்னா?? அப்புறம் என்னால தாங்க முடியாது (எப்படியெல்லாம் யோசிச்சு பிட்டு போட வேண்டியிருக்கு??)


அதோட இன்னொரு விஷயத்தை தெளிவுப்படுத்தனும்.. இது அனைத்தும் நான் காலேஜில் படித்த(??) போது எழுதியவை (நம்பணும் இதுக்காக டைரிய எல்லாம் காட்ட முடியாது) .. ஒரு சில கவிதைகள் (கிறுக்கல்கள்) என்னோடு ஹச்சிஎல் லில் சேர்ந்த நண்பர்களுக்கு நினைவிருக்க வாய்ப்பு இருக்கிறது.. ஏன்னா சிலத நான் ஒரு அறிமுக விழாவில் வாசித்தேன்.. கல்லூரியை விட்டு வந்த பிறகு சில சொந்த காரணங்களுக்காக இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன் (அப்பாடா தப்பிச்சோம்). "நெசமாத்தான் சொல்றியா??" நீதான் எழுதினியா அப்படின்னு கற்றது தமிழ் ஆனந்தி மாதிரி யாரும் கேட்கக்கூடாது என்னா?? கொஞ்சம் மொக்கை கவிதைகளாகத்தான் இருக்கும் பொறுத்தருள்க..
இந்த பதிவை டைப் செய்யும் போதே ப்ளாகர் மக்கர் பண்ணுவதால், பதிவின் நீளம் கருதி மற்றவை அடுத்த ப்ளாகில் விரைவில்..

8 comments:

  1. Gnana.... kalakittinga ponga..... arumai arumai..... ungallin sura pasathal.... neengal inru muthal, sura The Bloggist enru makkal anbudan azhaika paduveergal..... appuram enna mithiya Thiyaga pathukuvaru......

    ReplyDelete
  2. thanks Gopal!! ungala maadhiri rasigargalin aadharavu dhaan ennai ezhudha thoondudhu.. aamam nalla irukku apadingaradhu unmai dhaaney??

    ReplyDelete
  3. dai mandaya....super........ena vazkai varalara...
    ellarum eppadi kuppitalum......nanga ...mandayanthan kupiduom....ok.....

    ReplyDelete
  4. Amaichare..yenna ithallam?..... tharpothu manguni pulavarum(LK) blog elutha thayaraga ullar... En entha vibareetha vialyattu?...

    Thangal Blog ikku inda "Pandiya nadu" eppothum adimayae..

    ReplyDelete
  5. Super da vijay .. Namma veetla nadakuratha appadiye en kan munnadi paarkiren. Vasandhaku therija kooda paravaala. Saapida saapaadu kidaikum. Thenmozhiku(En AMMA) therinja ? kudika Kanji kooda kidaikaathu :)

    Appuram next Blogla Kavithaiya ?
    ORU SWEETSTALLE
    PANIYAARAM
    SAAPIDUGIRATHE
    AACHURIYAKURI !

    Intha maathiriya? Epadi irunthaalum OK. Looking forward to your next Blog !!!

    ReplyDelete
  6. thanks da.. Aenda indha ammakkal ellam ipadi irukkanga?? Hamam sopala vara maadhiri nalla ammakkaley illaya da?? :-)

    ReplyDelete
  7. Yenda ippadi neeyum , senthilum maathi maathi thaikulangal mela kurai sollikittu irukeenga??
    Avanga performance appa ippa korayum , But adhuku karanam ' They wer cornered , they wer helpless ' :D

    Idhula adhigama neenga avamanapaduthiyadhu sivagami ya than!! sivagamiyoda valarpaye neenga kelvikuriyaakiteenga!!!

    yennala idha porukka mudiyala !!

    Idha vida periya koduma yennena, kudumbathula enna maathiri ROMBA NALLA pasanga irundhum , motha kudumbam unga rendu perayum nallavannu solludhu paathiya( naan sevuthula yen thalaya muttikiran , unmayaga ) ELLAM TIME :P :P

    P.S
    Pona addittion vida idhu nalla irundhadhu!!
    sila idangall romba neelama irukura maathiri naan feel panran!! aana blog was really good!!

    ReplyDelete
  8. kadasi varrikum kavithai sollavala.......

    anna blog super machi. vijay fans yarum itha padichida kudathu

    ReplyDelete